ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் தர்சிகா சாமினி விஜேபண்டார, பாலித தெவரப்பெருமவை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
பாலித தெவப்பெருமவின் கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தெவரப்பெருமவின் சட்டத்தரணிகள் சில தடவைகள் பிணைக்காக இதற்கு முன்னர் விண்ணப்பித்த போதிலும், நீதவான் பிணை வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய சம்பவத்தில் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
