முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் இன்று பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில், தான் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அவருக்கு நெருக்கமான சிலரிடமே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னும் மூன்றாவது தடவையும் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக முயன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இரு வருடங்களையும் இழந்த மஹிந்த ராஜபக்ச இனியும் பிரதான அரசியலில் ஈடுபடாது தனது மகனான நாமல் ராஜபக்சவையே முற்படுத்த விரும்புவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளமையும் நாளைய தினம் கூட்டம் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த நிகழ்வு இன்னும் சில விநாடிகளில் (3.00) மணிக்கு ஆரம்பம்... விமல் வீரவன்ச நிகழ்வு இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை குறித்த நிகழ்வு இன்னும் சில விநாடிகளில் (3.00) மணிக்கு ஆரம்பம்... விமல் வீரவன்ச நிகழ்வு இடத்திற்கு வருகை தந்துள்ளார்.