திருடர்கள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் இருக்கும் போது ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டவர் எனது தந்தை என முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க தெரவித்துள்ளார்.
திருடர்கள், குண்டர்கள், கொலைகாரர்கள் இது போன்ற குற்றவாளிகள் இருக்கும் போது ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர்.
திஸ்ஸ அத்தநாயக்க என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர். என்ன அரசியல் இது?
இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. எனது அப்பாவிற்கு சட்டத்தில் நீதி கிடைத்தது தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஐக்கிய தேசிய கட்சி தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. அக்கட்சியின் செயலாளரை சிறைக்கு அனுப்பியுள்ளார்கள். என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே என துல்மினி அத்தநாயக்க நேற்று ஊடகவியளாளர்களிடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
