வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் விரைவில் சந்திக்கவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பெற்றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்திரிகையாளர்களுடனான நேற்றைய சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகால உறவு காணப்படுகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக காணப்படுகின்றனர்.
இரண்டு சமூகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் ஒற்றுமைப்பாட்டுடன் தீர்வைப் பெற்றுக்கொள்வதே அவசியமானது. ஆகவே அவை தொடர்பாகவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார்.
