அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்- பொதுபல சேனா

மைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது,

1968ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 45ம் இலக்க சட்டத்திற்கு அமைவாக அல் கய்தா தீவிரவாத இயக்கம் தடை செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பொதுபல சேனா இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலன்த விதானகே தெரிவித்துள்ளார்.

அல் கய்தா இயக்கத்திற்கு எதிரான தடையின் அடிப்படையில் ஏனைய தீவிரவாத மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், கடந்த காலங்களில் சிங்கள அமைப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு 50 பக்க குற்றச்சாட்டுக்கள் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சூரா பேரவைக்கு தேவையற்ற சலுகைகள் அதிகாரங்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்புக்களுடன் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை பேணி வரும் நபர்கள் அமைப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் கலாச்சார உடையான நிகாப்பை தடை செய்ய வேண்டுமென கோரியுள்ளார். இந்த ஆடையானது தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கடும்போக்குவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
(ஜ.மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -