அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மற்றுமொரு பதவி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பதற்கு , அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கட்சியின் அதியுச்சபீட மற்றும் தேசிய நிறைவேற்றுக் குழு கூட்டத்தின்போது இந்நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ, ஆட்சி மாற்றத்தோடு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதன் காரணமாகவே இப்பதவி வெற்றிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -