மஹிந்த பொதுமக்கள் பணத்தை சொகுசு ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தினார்:ஆதாரம் உள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமக்கள் பணத்தை சொகுசு ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தினார் என்பதனை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் உண்டு என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மக்கள் பணத்தை சுய தேவைகளுக்காக பயன்படுத்திமையை நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செலயகத்திற்காக 10,000 கோடி ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செலவு செய்ய தேவையில்லாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கு.த
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -