முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் அமரதுங்க நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டுக்களில் பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்களை மாற்றியமைத்து பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
சாதாரண கடவுச்சீட்டு மற்றும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்களில் பெயர், பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலும் சசி வீரவன்சவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வார்கள் என உயர் பொலிஸ் அதிகாரியொருவர்
