மைத்திரி, ரணில், சந்திரிகா, சம்பந்தன், ஹக்கீம் இணைந்து தனி அலகுகளை உருவாக்க முயற்சி- அமைச்சர் பீரிஸ்

மைத்­தி­ரி­பால, ரணில், சந்­தி­ரிகா, ரவூப், சம்­பந்தன் ஆகிய அனை­வரும்இணைந்து நாட்டில் இனரீதி­யாக தமிழ் முஸ்லிம் அல­கு­களை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். தமிழ், முஸ்லிம் என்ற இன அடிப்­ப­டையில் அல­கு­களை அமைத்து நாட்டை துண்­டாட முயற்­சிக்­கின்­றனர். இது நாட்­டுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­கும்­ என்று வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் இதனை தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது

எதி­ரணி முகா­மா­னது குழப்­பங்­களின் கூடா­ர­மா­கவே தொடர்ந்து காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தாக யாழ்ப்­பா­ணத்தில் கூறினார். ஆனால் மறு­புறம் அதே எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் சம்­பிக்க ரண­வக்க மாகாண சபை­களின் அதி­காரம் குறைக்­கப்­படும் என்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் மாற்­றப்­படும் எனவும் ஆளு­நரின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­படும் என்றும் கூறு­கின்றார். வானத்­தையும் பூமி­யையும் போன்றும் கருப்பும் வௌ்ளையும் போன்று பரஸ்­பரம் விரோ­த­மான கருத்­துக்­களை கொண்­டுள்ள இவர்கள் எவ்­வாறு இணைந்து நாட்டை ஆ்டசி் செய்­வார்கள்?

மைத்­தி­ரி­பால ரணில் சந்­தி­ரிகா ரவூப் சம்­மந்தன் ஆகிய அனை­வரும் ஜனா­தி­ப­தியை தோற்­க­டிக்­கவே முன்­வந்­துள்­ளனர். இவர்கள் அனை­வரும் இணைந்து நாட்டில் இன ரீதி­யாக தமிழ் முஸ்லிம் அல­கு­களை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். தமிழ் முஸ்லிம் என்ற இன அடிப்­ப­டையில் அல­கு­களை அமைத்து நாட்டை துண்­டாட முயற்­சிக்­கின்­றனர். இது நாட்­டுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும்.

ரவூப் ஹக்கீம் எம்­மிடம் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி அலகை கோரினார். நாம் முடி­யாது என்று கூறினோம். தற்­போது அவர் எதி­ரணிப் பக்கம் சென்­றுள்ளார். வடக்கு கிழக்கை இணைத்து தமிழ் பேசும் அலகை உரு­வாக்­கு­வதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நோக்­க­மாகும். அதற்கும் எதி­ரணி இணங்­கி­யுள்­ளது. மேலும் வடக்கில் இரா­ணுவ முகாம்­களை அகற்­றுதல் வட மாகாண சபைக்கு அதி­கா­ரங்ளை வழங்­குதல் ஆளு­நரின் அதி­கா­ரங்­களை குறைத்தல் என்­ப­வற்­றுக்கு கூட­ட­மைப்­புடன் சந்­தி­ரிகா இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளார்.

இவ்­வாறு தனி அல­கு­களை உரு­வாக்­கிய நாடு­க­ளுக்கு என்ன நடந்­தது என்று எமக்கு தெரியும். யூகோஸ்­லா­வியா இவ்­வா­றான முயற்­சியில் துண்­டா­டப்­பட்­டது. புலிகள் உள்­நாட்டில் தோற்­க­டிக்­க­ப­பட்­டாலும் சர்­வ­தேச மட்­டத்தில் வலு­வாக இயங்­கு­கின்­றனர். ருத்­தி­ர­கு­மாரன் நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராக இருக்­கின்றார். அவர்­க­ளுக்கு அமைச்­ச­ரவை உள்­ளது. தேர்தல் நடத்­து­கின்­றனர். உள்­நாட்டில் தமிழ்க் கூட்­ட­மைப்பு மறை­மு­க­மாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. எனவே நாட்டை இன­ரீ­தி­யாக பிரிப்­ப­தற்கே சதி முயற்சி உள்­ளது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே இயக்­கி­வ­ரு­கின்றார். வாக்­குகள் கிடைக்­கின்­றன என்­ப­தற்­காக எதற்கும் உடன்­பட முடி­யாது. எமது அர­சாங்­கத்தில் இன­வா­திகள் இல்லை. இன­வா­திகள் வேறு முகாமில் உள்­ளனர். பலஸ்­தீன நாடு உரு­வா­கு­வ­தற்கு ஜனா­தி­பதி மஹிந்த எழுப்­பிய குர­லுக்­காக அந்­நாட்டு ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்து கடிதம் அனுப்­பி­யுள்ளார். அந்­த­ள­வுக்கு ஜனா­தி­பதி சர்­வ­தேச மேடை­களில் பலஸ்­தீ­னத்­துக்­காக குரல் கொடுத்து வந்­துள்ளார்.

எமது நாட்டு மக்கள் நன்­றிக்­கடன் உள்­ள­வர்கள். இந்த நாட்டை மீட்­டெ­டுத்த ஜனா­தி­ப­திக்­காக அவர்கள் வாக்­க­ளிப்­பார்கள். மக்கள் இந்த தலை­வரை ஒரு­போதும் மறக்­க­மாட்­டார்கள். தற்போது வடககில் முதலமைச்சர் வேறு கல்வி பிரிவை கோரியுள்ளார். இதன்மூலம் தங்களை பிரித்துக்காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். யுத்த ரீதியில் ஈழக் கனவு தோல்வியடைந்துள்ளது. ஆனால் அதனை வேறு வழியில் பெற முயற்சிக்கின்றனர். இந்த நாட்டுக்கு யுத்தகாலத்தில் இருந்த சவாலைவிட அதிகமான சவால் தற்போது உள்ளது என்பதனை மறக்க்கூடாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -