கல்முனை மாநகர சபை ஆணையாளரின் துரித நடவடிக்கையால் சாய்ந்தமருது வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டது!


சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று மாலை திடீரென பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டதுடன், குறிப்பாக தோணாவை அண்டிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

நிலைமையின் அவசரத்தன்மையை உணர்ந்த கல்முனை மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டு, அதுகுறித்து கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபிக்கு தகவல் வழங்கினார்.

இதனையடுத்து மாநகர ஆணையாளரின் விசேட பணிப்புரையின் கீழ் சாய்ந்தமருது தோணா முகத்துவாரம் அவசரமாக வெட்டப்பட்டு தேங்கியிருந்த வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக நீர் விரைவாக வடிந்துசென்றதுடன், பெரும் அளவிலான வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயத்தில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபிக்கும், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீனுக்கும் சாய்ந்தமருது பிரதேச மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :