அவுஸ்­தி­ரே­லியா இலங்­கையின் ஜனா­தி­பதி தேர்­தலை உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றது!

வுஸ்­தி­ரே­லியா இலங்­கையின் ஜனா­தி­பதி தேர்­தலை உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றது. இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் சட்­ட­வி­ரோத புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை நடுக்­க­டலில் தடுத்து நிறுத்தும் கூட்­டு­திட்டம் பாதிக்­கப்­ப­டுமா என அச்சம் கொண்­டுள்ள அவுஸ்­தி­ ரே­லியா இலங்­கையின் ஜனா­தி­பதி தேர்­தலை உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­வ­தாக சிட்­னி­மோனிங் ஹெரல்ட் தெரி­வித்­துள்­ளது.

2009 இல் பெரு­ம­ள­வான தமி­ழர்கள் இறு­தி­யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டதை தொடர்ந்துபெரு­ம­ள­வா­ன­வர்கள்அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு தப்­பிச்­செல்ல முயன்­றதை தொடர்ந்து இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் நெருக்­க­ம­டைந்­தன.

அபொட் மற்றும் தொழில்­கட்சி அர­சாங்­கங்கள் இலங்­கை­யு­ட­னான உற­வு­களை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளன.கடந்த மார்ச் மாதம் ஜெனீ­வாவில் அவுஸ்­தி­ரே­லிய இலங்­கைக்கு ஆத­ர­வாக செயற்­பட்­டது.

எனினும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் இலங்­கைக்கு கேள்­வி­க­ளின்றி ஆத­ரவு வழங்­கு­வதை அபொட் அர­சாங்கம் நிறுத்­த­வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களின் பட­கு­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக இலங்­கை­யுடன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்த முனைந்­துள்ள அவுஸ்­தி­ரே­லியா,உண்­மையில் யுத்த குற்­ற­வா­ளி­க­ளுடன் நெருக்­க­மான உற­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இலங்­கையின் அடுத்த அரசாங்கத்துடனான அவுஸ்திரேலியாவின் உறவுகள் மனித உரிமைகரிசனைகளை மையப்படுத்தியமாக அமையவேண்டும் என பில் லைன்ச் என்ற மனித உரிமை பணியாளர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -