றவூப் ஹக்கீம் மீது வீண்பழி சுமத்துவதையே கொள்கையாக கொண்டுள்ளது அரசாங்கம் -பைரூஸ் ஹாஜி

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

ரசாங்கத்துக்கு விசுவாசமாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் பல வருடங்களாக மஹிந்த ராஜபக்ஸ்ஸவுடன் இருந்த அமைச்சர்கள் வெளியேரும் போது வாய் மூடி மெளனமாய் இருக்கும் இந்த அரசாங்கம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் சகோதரர் றவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசை விட்டு வெளியேறும் போது கிழக்கை பிரித்து தனி நாடாக பிரகடனம் செய்யப்போகின்றார் என வீன்பழி சுமத்துவதை வாழ்க்கையாக கொண்டுள்ளது என மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி நேற்று வெள்ளிக் கிழமை மலை (02.01.2015) மாளிகாவத்தை கெத்தாராம பகுதியில் இடம்பெற்ற மைத்திரிபாலவின் வெற்றியை பலப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பைரூஸ் ஹாஜி;

சிறுபான்மை சமூகங்கங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்ச்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்குமானால் அவர்கள் வடக்கை பிரிப்பது அல்லது கிழக்கை 
தனி நாடாக்குவது போன்ற எந்த பேச்சையும் எடுப்பதில்லை. 

ஆனால் அரசை விட்டு வெள்யேறும் போது மட்டும் கிழக்கு முஸ்லிம் நாடாகிவிட்டது என்றும் வடக்கை விடுதலைப் புலிகள் ஆட்ச்சி செய்யப் போகின்றார்கள் எனவும் வாழ்கிழிய கத்துகின்றார்கள். இக்கதையினை நாட்டின் பெரும்பானமை சமூகம் இப்போது ஏற்றுக்கொள்ளத தயாரில்லை என்பது வருக்கின்ற ஒன்பதாம் திகதி மைத்திபாலவின் வெற்றிக்குப் பிற்பாடு இந்த அரசாககத்துக்கு பாடமாக புகட்டப்படும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -