பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை இணைக்க பிரதேச செயலாளர் ஹனீபா நடவடிக்கை!

பி. முஹாஜிரீன்-

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாடசாலையை விட்டு இடைவிலகிய 65 மாணவர்கள் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினூடாக மீண்டும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.


சிறுவர் பாதுகாப்பும் ஆசிரியர்களின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடனான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எச்.எல். இஸ்பானா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தினால் சிறுவர்களின் பாதுகாப்பக்கென பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமை மேம்பாட்டுக்காகவும் பிரதேச செயலகங்கள் தோறும் பல உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் நினைத்தால் சமூகத்தில் எதனையும் சாதிக்க முடியும். ஆசிரியர் பணி புனிதமானது. ஒரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் ஒரு குடும்பம் போல் செயற்பட வேண்டும் அப்போதுதான் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இளம் சிறார்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும். சிறுவர்களைப் பாதுகாப்பது நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் பொறுப்பாகும். ஒரு பிரதேசத்திலுள்ள சிறுவர்களை அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையும் அப்பிள்ளைகளினது வீடும் நெறிப்படுத்த முடியும் என்றார்.

இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாரளர் எம்.ஏ. வாஹிட், அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எச்.எம். றிபாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம். பர்வின், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீத் உட்பட ஆசிரியர்களும் பாடசாலை சிறுவர் கழகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -