கட்சியை பாதுகாக்கிற முடிவினை எடுக்குமா முஸ்லிம் காங்கிரஸ்!

முஹம்மது றினாஸ்-

தேசியக் கட்சிகளின் (குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி) ஆதரவாளர்களாக நின்ற பெரும்பாலான முஸ்லிம்களை, முஸ்லிம் களினுடைய தனித்துவக் கட்சியின் தேவையை அவர்களுக்கு புரிய வைத்து முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற முஸ்லிம்களின் தனித்துவத்தின் கீழ் கொண்டுவர மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் உட்பட, கட்சியின் உயர்மட்ட, அடிமட்ட போராளிகளின் உயிர் தியாகங்களும், அர்பணிப்பும் உழைப்பும் இலகுவில் மறக்கக் கூடியதொன்றல்ல. (இன்றும் அப்போராட்டங்களில் துணைநின்ற பலர் கட்சிக்கு உள்ளேயும் வெளியும் இருக்கின்றனர்.)

தலைவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் தனித்துவமிக்க இக் கட்சியை இல்லாமல் செய்ய பல்வேறுபட்ட அரசியல் கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள் இடம்பெற்ற போதும் அவை கட்சிப்போராளிகளினால் முறியடிக்கப் பட்டு வந்துள்ளது. 

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசினதும் தலைமையினதும் முடிவனை எதிபார்த்து சலித்துப் போய் தங்களின் விருப்பினை பிரதிநிதித்துவம் செய்கின்ற தேசியக் கட்சிக்கும், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் தங்களுக்கு ஏதுவாக்கி அரசியல் காய் நகர்த்துகின்ற சில சில்லறை முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பின்னால் அணிதிரள்வதை பார்கின்ற போது மிகவும் வேதனையாக உள்ளது. 

முஸ்லிம்களுக்கென பாதுகாப்பை, அபிலாசைகளை, அபிவிருத்தியினை, மறுமலர்ச்சியினை உருவாக்கவென மறைத்த மாபெரும் தலைவரினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியானது இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களை முன்னின்று வழிநடத்த முடியாது (ஒரு முடிவினை எடுக்க முடியாமல்) திண்டாடுகின்றமை மிகப்பெரிய ஆச்சரியமாகவே தோணுகின்றது.

தேசியக் கட்சிகளின் பின்னால் நின்ற முஸ்லிம் மக்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்த இக்கட்சி, மீண்டும் அம்மக்களை தேசியக் கட்சிகளின் பின்னால் பயணிக்க இடமளிக்காது முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக முஸ்லிம்களின் தனித்துவமிக்க கட்சியாக தங்களை நிலைநிருத்திக் கொள்கின்ற முடிவினை காலம் தாழ்த்தாது எடுக்கவேண்டும். 

இலங்கை முஸ்லிம்களின் பாரிய சொத்தாக மறைத்த தலைவரினால் எமக்கு விட்டுச்செல்லப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இச்சந்தர்பத்தை பயன்படுத்தி காவுகொள்ள நினைகின்ற கயவர்களிடம் இருந்து பாதுகாப்பது இக்கட்சியின் இறுதி முடிவிலேயே தங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -