ஸிறாஜ் ஏ.மனீஹா-
இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பரிசளிப்பு விழாவும் மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிறு (09) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினரும், இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர் ,ஏ.எல்.தவம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.ராசிக், அட்டாளைச்சேனைபிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் யூ.கே.ஜபீர் மற்றும் உதவித் தவிசாளர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், விசேட அதிதிகளாகவும,; பாடசாலை அதிபர்கள்,ஊடகவியலாளர்கள்,உலமாக்கள், கல்வியலாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது இம்போட்மிரர் அனுசரனையில் புனித நோன்பை முன்னிட்டு இடம்பெற்ற கட்டுரைப்போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் பலர் பொன்னாடை போர்த்தி கெளரவித்து நிணைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment