ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் பகுதி நேர ஹிப்ழ் மத்ரசா ஆரம்பம்







பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை கிராமமான ரிதிதென்னை கிராமத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் முதலாவது (ஹிப்ழ்) அல் குர்ஆன் மனன பிரிவுக்கான மத்ரசா ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


ரிதிதென்னை மற்றும் ஜயந்தியாய ஆகிய கிராமங்களை உள்ளடக்கும் வகையில் மட்டக்களப்பு –கொழுப்பு ரிதிதென்னை பிரதான வீதியில் அமைந்துள்ள அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலில் இவ் ஹிப்ழ் மத்ரசா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 08-11-2014 நேற்று சனிக்கிழமை ரிதிதென்னை அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலின் தலைவரும்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ரிதிதென்னை பிரதேச இணைப்பாளருமான எம்.எச்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு சிறப்புரையை மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) நிகழத்தினார்.

இதன் போது அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலின் பகுதி நேர ஹிப்ழ் மத்ரசாவை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி) ஆரம்பித்து வைத்தார்.

இம் மத்ரசாவில் சுமார் 40 மாணவர்கள் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,மௌலவி பௌஸ் (பலாஹி) உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் , அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :