இம்போட் மிரர் செய்திக்கு பலன் : மக்கள் நன்றி தெரிவிப்பு

 ரோஷான் ஏ.ஜிப்ரி-

ரட்சியால் வாடிய வாங்காமம் வாழ் மக்களுக்கு “பௌசர்” மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களின் தீவிர நடவடிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் “பௌசர்”மூலம் குடிநீர் வழங்கப் படுவது வாங்காமம் வாழ் மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துரித செயற்பாட்டுக்கு உதவிய ஊடகங்களுக்கும்,கவனத்திலெடுத்து செயலில் இறங்கிய தவிசார் மற்றும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

மேலும்; நிரந்தர தீர்வான குழாய்நீர் இணைப்பை முடித்து வைக்க உரியவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்த்து வைக்கும் படியும் வினயமாய் வேண்டிக் கொள்ளப் படுகின்றீர்கள். இது தொடர்பாக இம்போட் மிரர் இணையத்தளம் பல அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தது குறிப்படத்தக்கது.

இச்செய்தியை கவனத்திற்கொண்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகரிகார்களுக்கு மக்கள் சார்பாகவும் இம்போட் மிரர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பிட்ட செய்திக்கு கிளிக் 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :