“எதிர்காலத்திற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்: புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் தாக்கம்” (Digital Technologies for the Future: Innovation, Integration, and Impact) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சமூகத்தின் நிஜ வாழ்க்கைச் சவால்களுக்கு தீர்வாக பயன்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, மொத்தம் 76 ஆய்வு சுருக்கங்களை உள்ளடக்கிய URCDICT 2026 Book of Abstracts பிரதம ஆசிரியர் எஸ்.எல் அப்துல் ஹலீம் தலைமையில் வெளியிடப்பட்டது.
இவ்வாய்வுகள் பின்வரும் முக்கிய துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்
பல்மீடியா மற்றும் விளையாட்டு தொழில்நுட்பங்கள்
வலைப்பின்னல் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
மென்பொருள் தொழில்நுட்பங்கள்
பரவலான கணினி பயன்பாட்டு தொழில்நுட்பங்கள்
தொடக்க நிகழ்வு, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்பவியல் பீட பீடாதிபதி ஆர். கே. அஹ்மத் றிபாய் காரியப்பர் உள்ளிட்ட பல்கலைக்கழக கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எம். ஜே. அஹமட் சபானி நிகழ்வுக்கு தலைமை வகித்தார். மேலும், ஏ. பாத்திமா முஸ்பிரா ஒருங்கிணைப்பாளராகவும், ஏ. எப். மஸ்ரூபா செயலாளராகவும் பணியாற்றினர்.
நிகழ்வின் பிரதான உரையை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கணினி பொறியியல் பேராசிரியர் றொசான் ஜி. றாகல் நிகழ்த்தினார். அவர் IEEE சிரேஷ்ட உறுப்பினராகவும், செயற்கை நுண்ணறிவு, Internet of Things மற்றும் உயிரியல் தகவலியல் போன்ற துறைகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் அறியப்பட்ட ஆய்வாளராகவும் திகழ்கிறார்.
இந்த ஆய்வு கலந்துரையாடல் 2026 ஏப்ரல் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. குறிப்பாக ICT பட்டப்படிப்பு 2019/2020 கல்வியாண்டைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டு ஆய்வு திட்டங்களை வெளியிடுவதற்கான சிறந்த தளமாக இது அமைந்தது.
மொத்தத்தில், URCDICT 2026 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆய்வு பண்பாட்டை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக திகழ்ந்தது. அதேவேளை, புத்தாக்கத்தை ஊக்குவித்தலும், கல்வித் திறமையை மேம்படுத்தலும், எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார் செய்யும் பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.

.jpg)

0 comments :
Post a Comment