குடிநீர் இன்றி வாங்காமம் வாழ் மக்கள் படும் அவலநிலை! சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு-படங்கள்




ரோஷான் ஏ.ஜிப்ரி.-

றக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் 10/ஏ,11/ஏ,எட்டாம் கட்டை ,ஒன்பதாம் கட்டை போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீர் வசதியற்று மிக மோசமான துயர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது எந்த அரசியல் வாதிகளுக்கோ,அரச அலுவலக கள அதிகாரிகளுக்கோ தனியார் தொண்டு நிறுவனங்களுக்கோ புலப்படாமல் இருப்பது கவலையை தருகின்றது.

வானம் பொய்த்த மண்ணில் வாடும் மக்கள் அவலம்.

வலது கை வாய்க்காலோ வரண்டு வெறிச்சோடிய வீதியாய்,ஆளக் கிணறுகளும் கைவிட காண சகிக்கவொண்ண கண்ணீர் கதை அரங்கேறுகிறது உங்கள் அயல் கிராமத்தில். ஆகவே அறியுங்கள் அதிகாரிகளே, வாக்குகளுக்காக மட்டும் வந்து போகாமல் மனித வாழ்விலும் வந்து போங்கள் அரசியல் ஆளுமைகளே,ஆதரவு கொடுங்கள் தொண்டு நிறுவனங்களே
குளக்கரை வாசலுடனும்,குழாய்நீர் வசதியுடனும் வாழும் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் வானத்தையும்,வாய்க்காலையும் நம்பி வாழும் உங்கள் உறவுகளின் வாழ்க்கையை.

வருடத்தில் எப்போதாவது வந்து பொழியும் மழையைப் போல் “வவுஷர்”  நீர் அனுப்பாமல் தினமும் காலை, மாலை இரு வேளையும் “வவுஷர்” குடிநீர் அனுப்ப ஆவனம் செய்யுங்கள் அத்துடன் பொருத்தியும்,பொருத்தாமலும் கைவிடப்பட்டிருக்கும் குழாய் நீர் திட்டத்தினை துரித கதியில் செயல் படுத்த ஆவனம் செய்யுங்கள்.

உபயோகத்திற்கு உப்பு நீர் கூட அற்ற மக்களுக்கு உதவ முன் வந்து வாய்காலில் நீர் திறக்க வழி செய்யுங்கள் என மிக தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.

மேற்குறித்த விடையம் தொடர்பாக உடனடியாக இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் யூ.கே.ஜபீரை  இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டதற்கு:
இறக்காம பிரதேச எல்லைக்குள் வரட்சியான இடங்களுக்குரிய நீர்விநியோகம் வழங்குவதற்குரிய பொறுப்பினை இறக்காமம் பிரதேச செயலகம் பொறுப்பெடுத்து செய்து கொண்டு வருகிறது.

இதுவரை பலதடவை உள்ளூராட்சி அமைச்சரிடம் நீர் வழங்குவதற்கான நீர்தாங்கி (பெளசர்) பல தடவை கேட்டிருந்து இன்னும் சபைக்கு வழங்கப்பட வில்லை உடனடியாக பிரதேச செயலாளரிடம் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரை இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:

மழைகாரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நீர் வழங்கும் வேலை மழை நின்றதும் வழமைபோல் ஆரம்பித்து விட்டோம் இது இனிமேல் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினரைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை விரைவில் பதிவிடுவோம்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :