ஜனாதிபதியின் பிறந்த நாளில் அமைச்சர் பெளசியும் அவரது மகனும் சேர்ந்து மருத்துவ முகாம் -படங்கள்





ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் மற்றும் அவரது பதவிப்பிரமானம் ஆகிவற்றை முன்னிட்டு மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி மற்றும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரின் ஏற்பாட்டில் மாளிகாவத்தை பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை(01) மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பும் இணைந்து இந்த இலவச மருத்துவ முகாமுக்கான அனுசரணையை வழங்கியிருந்தன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, கெஹலிய ரம்புக்வெல்ல, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கைத்தொழில் வாணிப அமைச்சின் செயலாளரும் சுயாதீன தொலைகக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளருமான அனுர சிறிவர்த்தன, மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, ஐ.ரீ.என் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.யு.சஹாபன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் கண்பரிசோதனையும் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டதுடன், ஈசீஜீ பரிசோதனை, பல் வைத்தியம் ஏனைய நோய்களுக்கான வைத்திய பரிசோதனையும் வழங்கப்பட்டது.

விசேட தேவையாளர்களுக்கு மூன்று சக்கர பைசிக்கிள், ஊன்றுகோல்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்து பயனடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :