சலீம் றமீஸ்-
இவ்வருட உலக சிறுவர் தினம் ஹவுஸ் ஓப் இங்கிலிஸ்- முன் பள்ளி நிறுவனத்தினால் மிக சிறப்பாக நடாத்தப்பட்டது. இப்பிராந்தியத்தின் ஆங்கில கல்விக்கு தன்னை ஈடுபடுத்தி வரும் ஹவுஸ் ஓப் இங்கிலிஸ் முகாமைத்துவப் பணி;ப்பாளர் ஏ.ரி.நக்கீல், நிருவாக பணிப்பாளர் றிபாஸ் ஏ.அஸீஸ் ஆகியோர்களின் ஆலோசனைக்கு அமைய ஹவுஸ் ஓப் இங்கிலிஸ் இன் அட்டாளைச்சேனை கிளை ஏற்பாட்டில் இந்த சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
அட்டாளைச்சேனை கிளையின் பணிப்பாளர் எம்;.ரி.சியாத் மற்றும் முகாமையாளரும் உளவளத்துனையாளருமான எம்.எஸ்.ஜெனீஸ் தலைமையில் சிறுவர் தினம் இடம் பெற்றதுடன், இறுதியாக அட்டாளைச்சேனை பாலத்தடியில் சிறுவர் ஒன்று கூடல் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment