பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்
பொத்துவில் அல் நூரானியா வித்தியாலயத்தின் சிறப்பு சிறுவர் தின நிகழ்வும் ஊர்வலமும் இன்று அல் நூரானியா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி. அப்துல் லத்தீப் தலைமையில் இடம் பெற்றது.; இந் நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமான பதாதைகளுடன் பாடசாலை சிறுவர்கள் ஊர்வலத்தில் பங்கு பற்றினார்கள்.
இன்று காலை 9.00 மணியளவில் அல் நூரானியா வித்தியாலயத்தின் முன்றலில் ஆரம்பித்த ஊர்வலமானது பொத்துவில் மத்திய வீதியினூடாக சென்று தவிசாளர் சிறுவர் பூங்காவையடைந்தது.
ஊர்வலத்தில் பங்குபற்றிய மாணவச்சிறுவர்களுக்கான தாக சாந்தி ஏற்பாட்டினை பொத்துவில் ரை விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்தது. ரை விளையாட்டுக்கழக முகாமையாளர் எஸ்.எச்.சப்ராஸ் முகம்மட் தல்மில் மற்றும் ரை விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜ.எல். இல்முடின் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment