கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை வலயத்தில் ஆறு பாடசாலைகளுக்கு தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு- வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து ஆறு இலட்சம் ரூபாவை அவர் ஒதுக்கீடு செய்திருந்தார் என்று மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் செயலாளர் சி.எம்.ஏ.முனாஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயம், லீடர் அஷ்ரப் வித்தியாலயம், றியாலுல் ஜன்னா வித்தியாலயம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி, நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம், மத்திய முகாம் அஸ்சிராஜ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கே இப்பாடசாலைத் தளபாடங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்திற்கு இத்தளபாடங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜெலீல், கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
_Copy1.jpg)
0 comments :
Post a Comment