தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு




எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் சிறந்த மாணவ தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் அணுசரனையில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (06) நடைபெற்றது.

சம்மாந்துறை சமாதானத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் வை.பீ.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சீ.திருக்குமார், தாருஸ்ஸலாம் வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஏ.எம்.இஸ்மாயில், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டி எனும் நூலின் முதல் பிரதியினை சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறை சமாதானத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :