அல் மீசான் சமூக நலன்புரி அமைப்பினரால் சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு கணனி


பி. முஹாஜிரீன்-

ட்டார் நாட்டில் தொழில் புரிவோர் ஒன்றியமான அல் மீசான் சமூக நலன்புரி அமைப்பின் எற்பாட்டில் சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு கணனி இயந்திரம் மற்றும் அச்சுப்பொறி என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கட்டார் நாட்டில் தொழில் புரிவோர் அமைப்பான அல் மீசான் சமூக நலன்புரி அமைப்பினரால் இவ்வுபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

கணனி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (07) சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இதில் அல் மீசான் சமூக நலன்புரி அமைப்பின் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் பாலமுனைக் கிளையின் தலைவருமான எஸ்.ரி.ஏ. ஹூதைப் உபகரணங்களை நிருவாகிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான பி.முஹாஜிரீன், எஸ்.எச். தம்ஜீது, ஏ.ஜி. அஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அல் மீசான் சமூக நலன்புரி அமைப்பினர் அண்மைக்காலமாக பாலமுனைக் கிராமத்திலுள்ள பள்ளிவாயல்கள் பொதுநல அமைப்பக்களுக்கு பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் பாலமுனை தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாயல், சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல், ஹைமாப் பள்ளிவாயல் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பு பொன் நிறுவனங்களுக்கும் இன்னும் பல பொதுநல அமைப்புக்களுக்கும் நிதியுதவிகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :