அதிகளவான வீரர்கள் உள்ள பொத்துவில் பாக்கியவத்தைக்கு விளையாட்டு மைதானம் இல்லை

பொத்துவில் எம்.ஏ.தாஜகான்-

பொத்துவில் பாக்கியவத்தைப் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதாக பாக்கியவத்தை பகுதி விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர். 

பொத்துவில் பிரதேசத்தின் பெரும் எண்ணிக்கையான விளையாட்டு வீரர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். பிரதேச மாவட்ட போட்டிகளில் இப்பகுதி வீரர்கள் சகல விளையாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றி வெற்றியீட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

பொத்துவில் பிரதேச செயலகம் பொத்துவில் பிரதேச சபை முன்னின்று இப்பகுதியில் பொது இடத்தில் பொது மைதானம் அமைத்து தருவதற்கு ஒத்தாசை நல்க வேண்டுமென பாக்கிய வத்தை இளைஞர் விளையாட்டு அமைப்பினர் கேட்டு கொள்கின்றனர். பொதுவிளையாட்டு மைதான கோரிக்கையினை பாக்கியவத்தை பிரதேச சபை உறுப்பினர் எம்.எச். அப்துல் றகீமிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :