பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ரூபா 45 இலட்சம் செலவில் பல அபிவிருத்தி திட்டங்கள் இன்று (06) சனிக்கிழமை பிற்பகல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம். அமானுல்லா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
ஒலுவில் அல் - ஜாயிஸா வித்தியாலயத்தில் ரூபா 25 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்று மதில் நுழை வாயிலுக்கான அடிக்கல் நடல், அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டு மைதான சுற்று மதிலுக்கான அடிக்கல் நடல், ரூபா 6 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கான உபகரணங்கள் வழங்கள் மற்றும் விளையட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல் என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம். நஸீர், பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் ஆகியோர் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றதுடன் திறமைகளை வெளிக்காட்டிய ஒலுவில் பிரதேச பாடசாலை மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். மேலும், இங்கு கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment