குர்ஆனின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஒரு நடிகர் இஸ்லாத்தில் இணைந்தார்-படங்கள்

முதன் என்ற இளைஞர் சில தமிழ் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இன்று குர்ஆனின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் . மிக அண்மையில் பிரபல

பேராசிரியர் நடிகர் பெரியார் தாசன் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் ஜெய், நடிகை மோனிக்கா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மற்றுமொரு நடிகர் அமுதன் என்பவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் ,இதற்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் ஏ .ஆர் . ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றுகொண்டமையும் குறிப்பிடத்தக்கது

தற்போது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ள அமுதன் பின்னருமாறு கூறுகிறார்.

‘எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டிருப்பேன். பல ஆண்டுகளாகவே இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒரு ஈர்ப்பு எனக்கு உண்டு. இந்த நண்பர் ஒரு நாள் எனது அறையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்டார். நானும் அனுமதித்தேன். அப்போது ஆன்மீகம் சம்பந்தமாக பல கேள்விகளை இவரிடம் கேட்டேன். பொறுமையாக அனைத்துக்கும் பதில் சொன்னார்.

இந்த கேள்விகள் காலை நான்கு மணி வரை தொடர்ந்தது. அதன் பிறகு சித்த வைத்தியர் டாக்டர் ஷாஜஹானின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சித்த வைத்தியமும் கற்றேன். 

அவர் மூலமாகவும் ஆன்மீக சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நான் சினிமா துறையில் இருப்பது எனது குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. கெட்டுப் பொய் விடுவேன் என்று பயந்தார்கள். எனது சமீப கால நடவடிக்கைகளைப் பார்த்த என் அம்மா ‘இஸ்லாத்துக்கு மாறப் போகிறாயா?’ என்று கேட்டார். 

அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். எனது முடிவில் நான் உறுதியாக இருப்பதாக எனது தாயாரிடம் சொன்னேன். ‘இஸ்லாத்தில் நேர்ந்தால் சினிமா துறையில் உன்னால் இருக்க முடியாதே’ என்று எனது தாயார் கேட்டார். ‘ஆமாம். சினிமா துறையில் தொடர விருப்பமில்லை. வேறு வேலை பார்த்து கொள்வேன்’ என்றேன். ‘இஸ்லாத்தை ஏற்றால் எங்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வாயா?’ என்று என் அம்மா கேட்டார்.

‘நான் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதால் ஒரு இந்துவாக இருந்திருந்தால் சாமியாராகப் போயிருப்பேன். உங்களை எல்லாம் இழந்திருப்பேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்பதால் சாமியாராக போக வேண்டிய அவசியம் இல்லை. கடைசி வரை உங்களுடனேயே இருப்பேன். இஸ்லாத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்றேன். என் தாயார் மௌனமாகி விட்டார்.

எம்ஏ முடித்து ஜர்னலிஷமும் படித்துள்ளேன். டெக்கான் க்ரோனிக்கல் பத்திரிக்கையில் தற்போது வேலை செய்து வருகிறேன். சினிமா துறையை ஒதுக்கி விட்டேன். அன்பையும் ஆதரவையும் எனது குடும்பமும் எனது நண்பர்களும் வழக்கம் போல் தர அந்த இறைவன் அருள் புரிய வேண்டும். நீங்களும் பிரார்தனை புரியுங்கள்’ என்று முடித்துக் கொண்டார்.

பணம்இ புகழ்இ இன்பம் என்று அனைத்தும் வெகு சுலபமாக கிடைக்கும் சினிமா துறையை வெறுத்து இன்று நேர் வழியான இஸ்லாத்தை நமது தமிழர்களின் பூர்வீக வழியான ஓரிறைக் கொள்கையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சகோதரர் அமுதனை வாழ்த்தி வரவேற்போம்.
வீடியோ பார்வைக்கு








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :