மூன்றாவது ஜனாதிபதி முறைமைக்கு எதிரான வழக்கில் நானே வாதாடுவேன்: சரத் என் சில்வா

னாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.

நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தமது கருத்துப்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார்.

18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் சில சிக்கல்கள் இருப்பதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு முடியாது என்றும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :