பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்து விட்டு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றேன்- ஹரீன் பெர்ணான்டோ

சொந்த விருப்பு வெறுப்புகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்து விட்டு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றேன் என்றால் அது இந்த மாகாண வாழ் மக்களுக்கு நான் ஒளிமயமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவேயாகும் என தெரிவித்த ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரீன் பெர்ணான்டோ தான் கட்சி மாறப்போவதாக பிரசாரம் செய்து வருவதானது உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தியத்தலாவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்;

தான் கட்சி மாறப்போவதாக சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது ஆகும். நான் எனது சொந்த விருப்பு வெறுப்புகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்து விட்டு வந்தது பொ.ஜ.ஐ. முன்னணியில் இணையவில்லை. மாறாக இம் மாகாணத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் வாழ்வை ஒளிமயமாக்குவதற்கே என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இம்மாகாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இம் மாகாணத்திலுள்ள நீர் வீழ்ச்சியினைப் பயன்படுத்தி இலங்கையில் மிகச் சிறந்த ஒரு மாகாணமாக ஊவா மாகாணத்தை ஆக்குவேன்.

இம்மாகாணத்திலுள்ள பொருட்களையும் உண்டியலிலுள்ள பணங்களையும் கொள்ளையிடும் அராஜக அரசியல்வாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். நான் நேர்மையான அரசியலில் ஈடுபட்டு வருபவன் நான் சொன்னதை செய்வேன். செய்வதை சொல்வேன். 

இன்று இம்மாகாணத்தில் இவ்வளவு காலமும் வராத அரசியல்வாதிகள் வந்து அரசாங்கத்தின் புகழ் பாடுகிறார்கள். எனவே, அரசின் கபட நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. வின் ஆட்சியை இம்மாகாணத்திலிருந்து உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :