ஆயுத கலாசாரத்தின் மூலம் ஊவா தேர்தலை வெற்றி கொள்வதற்கு இடமளிக்க மாட்டோம் - திஸாநாயக்க

வா மாகாண தேர்­தலில் அர­சாங்கம் வீழ்ச்­சி­ய­டையும் என்­பதை அரச தரப்­பினர் உணர்ந்து விட்­டனர். தனது இருப்பை தக்க வைத்­துக்­கொள்­ளவே வன்­மு­றை­களை கையாள்­கின்­றனர். எனினும் அர­சாங்­கத்தின் ஆயுத கலா­சா­ரத்தின் மூலம் ஊவா தேர்­தலை வெற்றி கொள்ள ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என தெரி­விக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க வன்­மு­றை­க­ளினால் தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­மாயின் அது ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

ஊவாவில் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்தா விட்டால் தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­மென தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் ஜே.வி.பி. யின் கருத்­தினை வின­விய போதே அக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அனுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்;

ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் மிக முக்­கி­ய­மான தேர்­த­லென்­பது தெரிந்தும் அர­சாங்க தரப்­பினர் வெற்­றியை வன்­மு­றை­களின் மூலம் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர். எதிர்க்­கட்­சி­களின் பிர­சார மேடைகள் கூட்­டங்­களில் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தனா­லும் துப்­பாக்­கி­களை காட்டி மிரட்­டு­வ­தா­னாலும் எதிர்க்­கட்­சி­களை அடக்கி விடலாம் என அர­சாங்கம் நினைக்­கு­மாயின் அதுவே அர­சாங்­கத்தின் வீழ்ச்­சி­யென நினைத்­துக்­கொள்ள வேண்டும். தேர்தல் தினம் நெருங்கும் நிலையில் அர­சாங்கம் தனது உண்­மை­யான நிலை­மையை உணர்ந்து விட்­டது. தமது தோல்வி உறு­தி­யா­கி­யுள்­ளமை தெரிந்­த­மை­யா­லேயே தற்­போது ஊவாவில் ஆயுத அடக்­கு­முறைச் செயற்­பா­டு­களை கையாள்­கின்­றது.

வன்­மு­றை­களின் மூலம் அப்­பாவி மக்­களை அச்­சு­றுத்தி தமது ஆயுத பலத்தை வெளிப்­ப­டுத்தி ஊவா மாகாண சபைத் தேர்­தலை வெற்றி கொள்­ளலாம் என அர­சாங்கம் நினைத்தால் அதற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்­களை ஒன்று திரட்டி ஊவா தேர்­தலில் அர­சாங்­கத்­திற்கு பாடம் கற்­பிப்போம்.

மேலும், வன்­மு­றை­களை மேற்­கொள்­வதும் தேர்தல் சட்­டத்­தினை மீறு­வதும் இந்த அர­சாங்­கமே. இது வெளிப்­ப­டை­யாக தெரிந்தும் தேர்­தல்கள் ஆணை­யாளர் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாத நிலையில் உள்ளார். பொலி­ஸாரும் பாது­காப்பு குழுக்­களும் அர­சாங்­கத்தின் பக்கம் செயற்­படும் போது வன்­மு­றை­க­ளையும் சட்ட மீறல் செயற்­பா­டு­க­ளையும் தடுப்­பது இய­லாத காரி­யமே. அதற்­காக தேர்­தலை பிற்­போ­டு­வதால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த இய­லாது. எனவே, ஜனநாயக ரீதியில் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தேர்தலினை நடத்தியாக வேண்டும். காலத்தினை பிற்போடுவதும் அரசாங்கத்திற்கு பயந்தும் ஊவா தேர்தலை பிற்போட்டால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :