இந்த நாட்டை துண்டாடும் எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாமென வடமாகாண முதலமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரனிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவுப் ஹக்கீம் உட்படலான அனைவரிடமும் சென்று கூறுங்கள் என மல்வத்தபீட நியாங்கொட விஜித தேரர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரான மிசெல் ஜே. சீசன், இன்று (30) மல்வத்த பீடத்தைச் சேர்ந்த நியாங்கொட விஜித தேரரை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள தேரர், சிங்களவர்களே இந்த நாட்டின் பெரும்பான்மையினர். அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விட தங்களுக்கு அதிகளவில் வேண்டுமென இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தினர் எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கவும் முடியாது.
இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் நெத் எப்.எம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment