எம்.ஜே.எம். முஜாஹித்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள இலக்கிய வாதிகளால் எழுதப்பட்ட நூல்கள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பண்பாட்டலுவலர் எ.டபில்யு.எ. விக்கிரம ஆராய்ச்சி தெரிவித்தார்.
மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீரதிஸாநாக்கவின் ஆலோசனைகமைவாக நூல்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென இரண்டு இலட்சத்தி 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரால் 2013ம் ஆண்டு யூன் மாதம் 2014ம் ஆண்டு ஜுலை மாதம் எழுதப்பட்ட நூல்களாக இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பத்துடன் இரண்டு நூகல்களை இணைத்து மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நூல்கள் பாடசாலைகள், நூலகங்கள், மற்றும் சனசமூக நிலையங்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் எனவும் பணிப்பாளர் எ.டபில்யு.எ. விக்கிரம ஆராச்சி மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment