அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிவந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்ற நீதவான் நீதிமன்றினால் ரூபா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லொறி ஒன்றில் முதிரை மற்றும் தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த சாரதியையும் லொறியையும் பொலிஸார் நேற்று (05) கைது செய்தனர்.
லொறியின் சாரதியை அக்கரைப்பற்று நிதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பஸீல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (05) ஆஜர் செய்தபோது ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லொறி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவருக்கெதிராக பொலிஸாரால் குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

0 comments :
Post a Comment