148வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சினேக பூர்வ உதைப்பந்தாட்டப் போட்டி அக்கரைப்பற்றில்-படங்கள்






நிஸ்மி, அக்கரைப்பற்று.

148வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ உதைப் பந்தாட்டப் போட்டியொன்று நேற்று (05.09.2014) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் மைதானத்தில்நடைபெற்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான இச் சினேகபூர்வ உதைப் பந்தாட்டப் போட்டி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா அவர்கள் கலந்து கொண்டார். நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா அவர்களுக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டி ஆரம்பமானது.

இதன்போது அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற உத்தியோகத்தர் குழு தங்களை எதிர்த்து விளையாடிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவிற்கு ஆறு கோல்களைப் போட்டனர். இறுதியில 06-0 கோல் வித்தியாசத்தில் அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற குழு வெற்றி பெற்றது. 

வெற்றி பெற்ற அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற குழுவிற்கு மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்ததோடு இரண்டாம் இடம் பெற்ற பொலிஸ் குழுவிற்கும் இரண்டாம் இடம் பெற்றமைக்கான கிண்ணத்தை வழங்கினார்.

உதைப் பந்தாட்டப் போட்டி ஆரம்பித்து 30 நிமிடங்களில் கடுமையான மழை பெய்த பொழுதிலும் இரு தரப்பினரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :