கண்ணீருடன் பதவி ஏற்றுக்கொண்டனர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில், அவர் தமது பதவியைத் தாமாக இழக்க நேர்ந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ஒரு மனதாக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பன்னீர் செல்வம் ஆளுனரை சந்தித்து தம்மை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில், இன்று மாலை நான்கு மணி அளவில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதல்வர் பன்னீர் செல்வத்துடன் பல அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதல்வர் பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பதவி ஏற்றுக்கொண்ட சில அமைச்சர்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபடி பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்ற நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா முதல்வராக அமர்ந்த அறைக்கு செல்லாமல், தாம் நிதியமைச்சராக அமர்ந்திருந்த அறையில் அமர்ந்து முதல்வர் பணிகளைப் பார்த்தார். நிதியமைச்சர் மற்றும் ஜெயலலிதா பார்த்து வந்த பொதுத்துறை மற்றும் காவல்துறை பொறுப்புக்களையும் முதல்வர் பன்னீர்செல்வம் கவனித்துக் கொள்கிறார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 comments :
Post a Comment