சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மாதாந்த சுகாதார ஒன்றுகூடல் வெற்றிகரமாக நடைபெற்றது



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) காரியாலயத்தின் மாதாந்த சுகாதார ஒன்றுகூடல் இன்று, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரியாலயத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு தங்களின் செயற்பாட்டு அனுபவங்கள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சேவை மேம்பாட்டிற்கான கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் கலந்து கொண்டு, பாடசாலை மருத்துவ பரிசோதனை (SMI) மற்றும் வர்த்தக நிலையங்களின் சுகாதார பரிசோதனை (Trade Inspection) தொடர்பான செயல்முறைகள், நடைமுறை சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.

அத்துடன், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கஃபூர் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். தனது உரையில், 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் காசநோயை முழுமையாக கட்டுப்படுத்தும் தேசிய இலக்கு, நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் அதில் சுகாதார பணியாளர்களின் முக்கிய பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கினார்.

மேலும், கல்முனை பிராந்திய தாய்-சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் டேனியல் கலந்து கொண்டு, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் தொடர்பான விடயங்களில் ஆழமான கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

இறுதியாக, ஊழியர்களின் கருத்துப் பகிர்வுகளுடன் மாதாந்த சுகாதார ஒன்றுகூடல் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :