கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சமுக சேவைகள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள 'விசேட தேவை உள்ளவர்களுக்கான அரச கலை விழா' நடாத்துவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் பணிப்பாளர் விஜித் கணுகல தெரிவித்தார்.
நாட்டில் விசேட தேவைகள் உள்ளவர்கள் மத்தியில் விசேட கலை திறமைகள் கொண்டவர்கள் அதிகமாக காணப்படுவதால் அவர்களின் கலைத்திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வருடம் முதல் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கான அரச கலை விழாவை வருடம் தோறும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் வரையறுக்கப்பட்ட பிரிவு, திறந்த பிரிவு மற்றும் சக்கர நாட்காலியினர் என 03 பிரிவில் நடைபெறும்.
வரையறுக்கப்பட்ட பிரிவு பிறப்பில் அங்கவீனர்களாகவும், திறந்தபிரிவு நோய்களால் மற்றும் விபத்துக்களால் அங்கவீனர்களாகவும் இருப்பதோடு சக்கர நாட்காலி பிரிவு சக்கர நாட்காலி பாவிப்பவர்களாக இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடனம், இசைக்கருவிகள் இசைத்தல், பாடல்கள் பாடுதல், மேளம் வாசித்தல், ஓவியம் வரைதல், மற்றும் நாடக பாத்திரமாக நடித்தல் ஆகிய போட்டிப் பிரிவுகள் நடைபெறும்.
பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் எதிர்வரும் 15 ம் திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலைவிழா மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் நடைபெறும்.

0 comments :
Post a Comment