பி. முஹாஜிரீன்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர்கள் திணைக்களம் நடாத்தும் 2014ம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட பாரம்பரிய கூத்துப்போட்டி 09ம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று மத்திய காலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பாரம்பரிய கூத்து நடனப் போட்டியாளர்கள் பங்குபற்றி தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிக்கு நடுவர்களாக கலாசார உத்தியோகத்தர் கே. அன்பழகன், ஆரையூரான் கலாபூசணம் மு. அருளம்பலம், கலாபூரணம் தேனியூரான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், அட்டாளைச்சேனை பிரதேச கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். அம்ஜத் உட்பட கலாசார உத்தியோகத்தர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டனர்;.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment