சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் வேண்டுகோளுக்கினங்க தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொத்தவில் கிரான்கோவை ஓடையாறு விவசாயப்பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு உள்ளுராட்சி , மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும், நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மிக நீண்ட காலமாக கிரான் கோவை விவசாய வீதி அபிவிருத்தி செய்யப்படாததினால் இப்பிரதேச விவசாயிகள் அதாவது நெற்செய்கை காலத்தில் விதை நெல், பசளை போன்றவற்றினை கொண்டு செல்வதற்கு பல சிரமங்களை எதிர் கொண்டு வந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின்; முயற்சியினால் இவ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், பொத்துவில் பிரதேச மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர் டபிள்யு.யு.கே.டி.சிறிவர்த்தன, மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் பி.டி.ஏ.ஜெயக்குமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் றஹீம் உட்பட விவசாய, நீர்ப்பாசன குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment