மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்.







பேராதெனிய, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது.

மாலபே தனியார் கல்லூரியின் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி (Hospital Training) வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அண்மையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐவரால் தமக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சிவழங்குமாரு (Hospital Training) கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வழங்கப்பட இருந்த நிலையில், குறித்த மனுதாரர்கள் வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

மாலபே பல்கலைக்கழகத்திக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு,பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள்பொறளை சுற்றுவாரத்தில் இருந்து சுகாதார அமைச்சு வரை அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி வழங்குவதை கண்டித்து எதிர்ப்புபேரணி ஒன்றை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :