அம்பாரை மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு




ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரி மாணவி ஏ.சீ.பாத்திமா சுமையா இல்மியையும்(193) அவரது தோழியான எம்.ஆர்.பாத்திமா சியாசத் நிப்றா(178) ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று(29) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி.என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், பொற்கிளி என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் 'உதவும் கரங்கள்' அமைப்பின் நேரசூசிகள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இந்நாட்டை மாற்ற வேண்டுமென்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தக் கனவை நனவாக்குவதற்கு இங்குள்ள ஒவ்வொரு மாணவியும் மஹிந்த ராஜபக்ஷவாக உருமாற வேண்டும். மருத்துவத்துறை, பொறியல் துறை, சட்டத்துறை, கலைத்துறை என்று மட்டுமல்லாது, இலட்சியவாதிகளாக, இலட்சிய புரிசர்களாக நீங்கள் அரசியலுக்குள்ளும் வர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :