பேஷ் இமாம்கள். மற்றும் கதீப்மாருக்கான கருத்தரங்கு






பி.எம்.எம்.ஏ.காதர்-

செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சமய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் 'பேஷ் இமாம்கள். மற்றும் கதீப்மாருக்கான சமய, சமூக உளவியல் கருத்தரங்கு' இன்று (07-09-2014) காலை 5.45 தொடக்கம் பி.ப 2.45 வரை மருதமுனை நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல்மாடியில் செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் முஸ்னி இப்னு முகம்மது நாபி தலைமையில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக ஓமான் பல்கலைக்கழக பேராசிரியர் மருதமுனையைச் சேர்ந்த எச்.எம்.நஸீர் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன், வர்த்தகர் எம். ஐ.உபைத்துர்றஹ்மான்,ஆகியோர் கலந்து கொண்டனர். வளவாளர்களாக மௌலவிகளான என்.ஜி.ஏ.கமால். எம்.எம்.கலாமுல்லா, ஏ.எல்.எம்.றிப்கான், எம்.எச்.எம்.எஹியா, எப்.எம். அகமதுல் அன்சார் மௌலானா, கே.எல்.எம்.ஹனிபா விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல் ஆகியோருடன் சிரேஸ்ட உதவிப்பதிவாளர் பி.எம்.முபீன், இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம்.ஹாறுன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :