அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு



பி.எம்.எம்.ஏ.காதர்-

பெரிய நீலாவணை அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் பராமரிப்பில் இயங்கிவரும் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று (03-09-2014) மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல்மாடியில் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் தலைவரும், தாறுல்; ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி அதிபருமான அஷ்சேய்க் எம்.எல்.முபாரக் மதனி தலைமையில் நடைபெற்றது.

 இதில் ஆலோசகர் வை.எல்.அன்சார் கற்கை நிலையத்தின் பொறுப்பாசிரியர் அல்-ஹாபில் எம்.ஐ.சினான், ஆசிரியர் அல்-ஹாபில் ஏ.ஜீஅப்சான், அஷ்சேய்க் ஆர.;நுபிஸ் மக்கி, அஷ்சேய்க் எஸ்.எச்முஜீப் சலபி, யு.எல்.சஜீத் சலபி ஆகியோருடன் அல்-மஃஹதுல் இஸ்லாமி அல்-குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் பிரதித்தலைவர் ஐ.எல்.எம்.பாறூக், செயலாளர் என்.எம்.நாஸீக் பொருளாளர் ஏ.ஆர்.தாஜூதின் ஆகியோரும் பெற்றோர்களும் கலந்து கொணட்னர். விடுமுறை காலத்தில் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :