ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதற்குப் பிறகு அட்டாளைச்சேனை, பாலமுனை கடற்கரைப்பகுதியில் கடல் உள்நோக்கி கரைவிட்டுச் சென்று கொண்டிருப்பதால் மீனவர்களுக்கு பாரிய சிரமம் ஏற்படுகிறது.
நீண்ட தூரம் மணலில் நடக்கவேண்டும் தங்கள் வலையில் பட்டுக் கரைக்கு விற்பதற்கு மீன்களைக் கொண்டுவருவதில் சிக்கலாக இருக்கிறது எங்களுக்கு பாதை அமைத்துத்தாருங்கள் என்று மீன்வர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து அங்கு கிறவல் வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வீதி அமைப்பு நேற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் தலமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ் எஸ்.எல்.முனாஸ் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய பிரதேசசபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களின் அனுமதியுடன் இவ்வீதி புனரமைக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதுபோன்று அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவு மீனவர் துறைக்கும் , பாலமுனை, ஒலுவில் மீனவர் துறைகளுக்கும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





0 comments :
Post a Comment