முப்பத்தேழு வருட ஆசிரிய சேவை இஸ்மாயில் ஆசிரியருக்கு பாராட்டு -படங்கள்






நிஸ்மி, அக்கரைப்பற்று-

முப்பத்தேழு வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியால விஞ்ஞான ஆசிரியர் கல்விமான எஸ்.எல்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலை சமுகம் இணைந்து நடாத்திய பிரிவுபசார வைபவம் நேற்று முன்தினம் (01.09.2014) திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஆயிஷா வித்தியாலய அன்னை சாலிஹா மண்டபத்தில் நடைபெற்றது.

சிறந்த ஆசிரியர் ஒர் சிரஞ்சீவி என்ற தொனிப் பொருளில் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.நயீம் தலைமையில் நடைபெற்ற இப் பிரிவுபசார வைபவத்தின்போது பிரிவுபசார வைபவத்திற்கு வருகை தந்த கல்விமான் எஸ்.எல்.எம்.இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் அதிபர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பாடசாலை சமுகம் அவருக்கு மலர் தூவி வரவேற்று பழைய மாணவர்களின் பொல்லடி நிகழ்ச்சியுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எஸ்.அஹட் கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லா மௌலவி, கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.அப்துல் கபூர், பாடசாலை பிரதிஅதிபர், ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலைஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழையமாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், அவரிடம் கற்று உயர் கல்விக்காக கடந்த ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கல்விமான் இஸ்மாயில் ஆசிரியரின் அர்ப்பணிப்புடனான சேவையைப் பாராட்டி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எஸ்.அஹட் கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லா மௌலவி, கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.அப்துல் கபூர், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் உரையாற்றியதைத் தொடர்ந்து அதிபர் எம்.எஸ்.ஏ.நயீம் பொன்னாடை போர்;த்;தி, நினைவுச் சின்னம் வழங்க, பிரதி அதிபர் எஸ்.றிபாயுதீன் பொற்கிழி வழங்கினார். 

தொடர்ந்து இவரிடம் கற்ற பழைய மாணவர்களான ஏ.ஆர்.பிஸ்ரி பொன்னாடை போர்த்த, ரி.றிகாஸ் வாழ்த்துப் பத்திரம் வாசித்து வழங்க, ரி.நதீஸ் பரிசு வழங்கயதோடு. இவரிடம் கற்ற ஏராளமான பாடசாலையை விட்டு உயர் கல்விக்காக வேறு பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி, வாழ்த்துப் பத்திரம் வாசித்து வழங்கி பாராட்டியமை இந்த ஆசிரியரின் அர்ப்பணிப்புடனான சிறந்த சேவையை எடுத்துக் காட்டியது.

இவரின் சேவையைப் பாராட்டி கலசம் என்ற சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :