த.நவோஜ்-
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2013.08.27ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள திருவிழா எதிர்வரும் 14ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
எனவே இவ்உற்வசத்தினை முன்னிட்டு வருடா வருடம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்படும் ஆன்மீக பாதயாத்திரையானது எதிர்வரும் 09ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி 13ம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
எனவே ஆன்மீக பாத யாத்திரையில் பக்த அடியார்கள் அனைவரும்; கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர்.
இப்பாதயாத்திரை ஆரம்பிக்கும் நாள் தொடக்கம் முடிவடையும் நாள் வரை கலந்து கொள்பவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் என்பன வழங்கப்படும்.
இப்பாதயாத்திரையானது மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி குறுமண்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு, மாமாங்கம், ஊறணி, பிள்ளையாரடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கறுவாக்கேணி, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, மயிலங்கரச்சை, மாங்கேணி, மாவடியோடை, பனிச்சங்கேணி, வாகரை, புளியங்கண்டலடி, கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்ச்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களில் பிரதான வீதி வழியாக உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
இப்பாதயாத்திரை ஒழுங்குகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment