த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் பெண்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பிரதேச செயலகம் தோறும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு நிதிகள் வழங்கும் திட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ஒன்பது மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment