சர்வதேச விசாரணையை நடத்தும் அளவுக்கு இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை -அரசாங்கம்

ர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்தும் அள­வுக்கு இலங்­கையில் எவ்­வி­த­மான மனித உரிமை மீறல்­களும் இடம்­பெ­ற­வில்லை என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பா­ட்டில் எந்த மாற்­றமும் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறி­பால டி.சில்வா தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யா­னது இன்­றைய நிலையில் ஒரு அர­சியல் அமைப்­பாக மாறி­யுள்­ளது. இலங்­கைக்கு எதி­ரான செயற்­பா­டு­களை நாங்கள் தொடர்ந்து நிரா­க­ரிப்போம். அதே­வேளை இலங்­கையின் நியா­யத்தை எமது நட்பு நாடுகள் தெரிந்­து­கொள்­வ­தற்­காக முன்­வைப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது;

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. இந்­நி­லையில் இலங்கை விவ­காரம் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் மனித உரிமைப் பேர­வையின் சார்பில் வாய்­மூல அறிக்கை இந்த அமர்வின் போது வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் இலங்­கைக்கு எதி­ரான அநீ­தி­யான மனித உரிமைப் பேர­வையின் செயற்­பா­டு­களை நிரா­க­ரிப்­பது என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் செயற்­ப­டுவோம்.

சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்தும் அள­வுக்கு இலங்­கையில் எவ்­வி­த­மான மனித உரிமை மீறல்­களும் இடம்­பெ­ற­வில்லை என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பா­ட்டில் எந்த மாற்­றமும் இல்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யா­னது இன்­றைய நிலையில் ஒரு அர­சியல் அமைப்­பாக மாறி­யுள்­ளது. இலங்­கைக்கு எதி­ரான செயற்­பா­டு­களை நாங்கள் தொடர்ந்து நிரா­க­ரிப்போம். அதே­வேளை இலங்­கையின் நியா­யத்தை எமது நட்பு நாடுகள் தெரிந்­து­கொள்­வ­தற்­காக முன்­வைப்போம்.

குறிப்­பாக முன்னாள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கை­யையும் அவரின் செயற்­பா­டு­க­ளை­யும் நாங்கள் நிரா­க­ரித்தோம். அவ்­வாறே தொடர்ந்து இலங்­கைக்கு எதி­ரான செயற்­பா­டு­களை நிராகரிப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :