கூட்டமைப்பின் காலக்கெடுவுக்கு அரசாங்கம் அடிபணிய மாட்டாது -அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா

ர­சியல் தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் காலக்­கெ­டு­வுக்கும் அச்­சு­றுத்­த­லு­க்கும் அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணி­யாது. தீர்வைப் பெற­வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்றத் தெரிவுக்­கு­ழு­வுக்கு கூட்­ட­மைப்பு வர­வேண் டும் என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை என்று அமைச்­சரும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இரு­த­ரப்பு பேச்­சுக்­க­ளுக்கு சாத்­தி­ய­மில்லை. மாறாக தெரி­வுக்­கு­ழு­வுக்கே அவர்கள் வர­வேண்டும். கூட்­ட­மைப்­பினர் சாத்­வீக வழியில் போரா­டலாம். ஆனால் வன்­மு­றையில் வழியில் பய­ணிக்க இட­ம­ளிக்­க­மா­மட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்­டிய தேவை

கூட்­ட­மைப்­புக்கு இல்லை. இந்த பிரச்­சினை நீடிப்­பதே அவர்­களின் தேவை­யா­க­வுள்­ளது. காரணம் அர­சாங்­கத்­துடன் மோதிக்­கொண்­டி­ருந்­தால்தான் கூட்­ட­மைப்­பினர் வடக்கில் அர­சியல் செய்­யலாம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது

தேசிய பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காணும் நோக்­கி­லேயே பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை நாங்கள் நிய­மித்­துள்ளோம். அந்­த­வ­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அந்தத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யா­க­வுள்­ளது. அந்த கோரிக்­கையை தற்­போதும் நாங்கள் முன்­வைக்­கின்றோம்.

அர­சியல் தீர்வு விரை­வாக வர­வேண்­டு­மானால் கூட்­ட­மைப்­பினர் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்டும். ஆனால் கூட்­ட­மைப்­புக்கு அவ்­வாறு விரை­வாக தீர்வை பெறும் எண்ணம் இல்லை. காரணம் விரை­வான தீர்வு கிடைத்­து­விட்டால் அவர்­க­ளினால் வடக்கில் அர­சியல் செய்ய முடி­யாமல் போய்­விடும்.

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இல்லை. இந்த பிரச்­சினை நீடிப்­பதே அவர்­களின் தேவை­யா­க­வுள்­ளது. காரணம் அர­சாங்­கத்­துடன் மோதிக்­கொண்­டி­ருந்­தால்தான் கூட்­ட­மைப்­பினர் வடக்கில் அர­சியல் செய்­யலாம் என்­பதால் அதனை இழுத்­த­டித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இது இவ்­வாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை அர­சாங்கம் நடத்­து­வதில் அர்த்தம் இல்லை. ஆளும் கடசி அவர்­க­ளுடன் பேச்சை நடத்­தி­விட்டு பின்னர் ஏனைய கட்­சி­க­ளுடன் பேசிக்­கொண்­டி­ருக்­க­வேண்டும். அத­னை­விட அனைத்து கட்­சி­களும் ஒரு மேசையில் அமர்ந்து பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து பேசு­வதே பொருத்­த­மாக அமையும்.

அத­னால்தான் தெரி­வுக்­கு­ழுவின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் இதற்கு வரு­மாறு கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கின்றேன். நாங்கள் குறு­கிய காலத்தில் தீர்வை அடை­வ­தற்­கான வழியை கூறு­கின்றோம். ஆனால் கூட்­ட­மைப்­பி­னரோ காலத்தை இழுத்­த­டித்து பிரச்­சி­னையை நீடிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

இந்­ந­லையில் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களும் கூட்­ட­மைப்­பினர் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்டும் என்றே கூறு­கின்­றனர். ஆனால் கூட்­ட­மைப்பு தெரி­வுக்­கு­ழு­வுக்கு வராமல் உள்­ளது.

இதே­வேளை அர­சியல் தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் காலக்­கெ­டு­வுக்கும் அச்­சு­றுத்­த­லு­கக்கும் அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணி­யாது. தீர்வைப் பெற­வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு கூட்­ட­மைப்பு வர­வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இரு­த­ரப்பு பேச்­சுக்­க­ளுக்கு சாத்­தி­ய­மில்லை. மாறாக தெரி­வுக்­கு­ழு­வுக்கே அவர்கள் வர­வேண்டும். கூட்­ட­மைப்­பினர் சாத்­வீக வழியில் போரா­டலாம். ஆனால் வன்­முறை வழியில் பய­ணிக்க இட­ம­ளிக்­க­மா­மட்டோம். யாருக்கும் பயந்­து­கொண்டு நிலைப்­பாட்டை மாற்றும் பழக்கம் அர­சாங்­கத்­துக்கு கிடை­யாது. எமது நிலைப்­பாட்டில் ஒரு­போதும் எந்த மாற்­றமும் ஏற்படாது.

தீர்வுக்கு அவசரம் எனின் கூட்டமைப்புககு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அங்கு வந்து அதனை குறிப்பிடலாம். அது மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என்று யார் கூறினாலும் அதனையும் தெரிவுக்குழுவில் கூறலாம். தற்போதைக்கும் அவ்வாறான பல யோசனைகள் தெரிவுக்குழுவுக்கு வந்துள்ளன. அதற்கு மாறுபட்ட வகையிலான கருத்துக்களும் வந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :